உழைப்பால் தன்னை மட்டுமின்றி தனது நாட்டையும் உயர்த்தி காட்டியவர்கள் தான் தமிழர்கள் என முதலமைச்சர் ஸ்டாலின் உரை.
பல நாடுகளில் தவிர்க்க முடியாத சக்தியாக தமிழர்கள் விளங்கி வருகிறார்கள் என முதலமைச்சர் முக ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் அயலக தமிழர் தின விழாவில் பேசிய முதலமைச்சர், அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை சார்பில் அயலக தமிழர் தினம் கொண்டாடட்டம். திமுக அரசு அயலக தமிழர்களுக்காக தனி துறையை உருவாக்கி அமைச்சரை நியமித்துள்ளது.
அயலக தமிழர்களுக்கு தமிழ்நாடு அரசு உறுதுணையாக இருக்கும். 2010-ல் அயலக தமிழர்களின் நலன் காத்திட ஒரு துறையை உருவாக்க கலைஞர் முயன்றார். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 12-ஆம் தேதி அயலக தமிழர் நாளாக கொண்டாடப்படும் என திமுக அரசு அறிவித்தது. கொரோனாவால் 80,000 பேர் தமிழகம் திரும்பியபோது மானியத்துடன் கடன் வசதி வழங்கும் புதிய திட்டம் கொண்டுவரப்பட்டது.
அயலக தமிழர்களின் ஆற்றலும் ஆராய்ச்சி திறனும் தனிப்பெரும் வரலாறாக உருவாகி வருகிறது. உழைப்பால் தன்னை மட்டுமின்றி தனது நாட்டையும் உயர்த்தி காட்டியவர்கள் தான் தமிழர்கள் எனவும் தெரிவித்த முதலமைச்சர், கடலும், கண்டங்களும் நம்மை பிரிந்திருந்தாலும் தமிழ் இணைக்கும் என்றார்.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…