தெலுங்கானாவின் ஆளுநராக நாளை பதவி ஏற்கிறார் தமிழிசை
தெலுங்கானாவின் ஆளுநராக தமிழிசை நாளை காலை 11 மணிக்கு பதவி ஏற்க உள்ளார்.
தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசையை தெலுங்கானா மாநிலத்திற்கு ஆளுநராக நியமனம் செய்வதாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்தார்.இதனையடுத்து தமிழிசை ஆளுநராக பதவி ஏற்கும் தேதி அறிவிக்கப்பட்டது.அதாவது செப்டம்பர் 8-ஆம் தேதி பதவி ஏற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் தெலுங்கானாவின் ஆளுநராக தமிழிசை நாளை காலை 11 மணிக்கு பதவி ஏற்க உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானாவின் ஆளுநராக தமிழிசை பதவி ஏற்பது குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்தார்கள்.தமிழிசைக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எஸ். சவுஹான் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.