நாளை மறுநாள் முதலமைச்சர் முக ஸ்டலின் தலைமையில் ‘தமிழ்நாடு நாள் விழா’ நடைபெற உள்ளது.
ஜூலை 18-ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் முதலமைச்சர் முக ஸ்டலின் தலைமையில் ‘தமிழ்நாடு நாள் விழா’ நடைபெற உள்ளது. காலை 11.30 மணிக்கு நடக்கும் இவ்விழாவில் கருத்தரங்கம், குறுப்படம் திரையிடம் ஆகியவை நடைபெற உள்ளது. இலக்கிய மாமணி, கபிலர் விருது, உ.வே.சா விருது உள்ளிட்ட பரிசுகளும் வழங்கப்பட உள்ளது. கீழடி உள்ளிட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களும் இவ்விழாவில் காட்சிப்படுத்தப்படுகிறது.
தமிழ்நாடு நாள் மணற்சிற்பத்தை மெரினா கடற்கரையில் ஒடிசாவை சேர்ந்த சுதர்சன் பட்நாயக் உருவாக்குகிறார். தமிழ்நாடு நாள் வரலாறு குறித்த தகவல்கள் அடங்கிய நூல் சிறப்பு மலராக நிகழ்ச்சியில் வெளியிடப்படுகிறது. மணல் சிற்பம், சிறப்பு கண்காட்சி ஜூலை 18 முதல் 20 வரை பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட உள்ளது. இவ்விழாவில் பங்கேற்று முதலமைச்சர் முக ஸ்டாலின் பேருரையாற்றவுள்ளார்.
மேலும், தமிழ்நாடு நாள் விழாவில், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்கவுள்ளார்கள். இந்நிகழ்ச்சியினை சமூக ஊடகங்கள் மற்றும் தமிழ்நாடு அரசு கேபிள் தொலைக்காட்சியின் மூலம் நேரலையில் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை : சீனாவில் பாதிக்கும் HMPV தொற்றானது, இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஏற்கனவே, கர்நாடகா மாநிலம் பெங்களூருவில்…
இந்த வருடத்திற்கான முதல் தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் நேற்று நடைபெற்ற நிலையில், ஆளுநர் கலந்துகொண்டு உரையாற்றுவார் என கூறப்பட்டது. ஆனால்,…
சென்னை : தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகையாக உள்ள நயன்தரா - இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த 2022ஆம்…
நியூ யார்க் : குல்தீப் குமார் எனும் 35 வயது மதிக்கத்தக்க நபர் அமெரிக்காவில் பணியாற்றி வந்துள்ளார். இவர் கடந்த…
டெல்லி : அடுத்த மாதம் (பிப்ரவரி) தலைநகர் டெல்லியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான தேர்தல் பரப்புரை வேலைகளை…
கர்நாடகா: சினாவில் பரவி வரும் HMPV தொற்றானது, இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. சளி, இருமல், தொண்டை எரிச்சல்,…