#TamilNaduDay: ஜூலை 18 தமிழ்நாடு நாள் விழா – முதலமைச்சர் பங்கேற்பு!

Default Image

நாளை மறுநாள் முதலமைச்சர் முக ஸ்டலின் தலைமையில் ‘தமிழ்நாடு நாள் விழா’ நடைபெற உள்ளது.

ஜூலை 18-ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் முதலமைச்சர் முக ஸ்டலின் தலைமையில் ‘தமிழ்நாடு நாள் விழா’ நடைபெற உள்ளது. காலை 11.30 மணிக்கு நடக்கும் இவ்விழாவில் கருத்தரங்கம், குறுப்படம் திரையிடம் ஆகியவை நடைபெற உள்ளது. இலக்கிய மாமணி, கபிலர் விருது, உ.வே.சா விருது உள்ளிட்ட பரிசுகளும் வழங்கப்பட உள்ளது. கீழடி உள்ளிட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களும் இவ்விழாவில் காட்சிப்படுத்தப்படுகிறது.

தமிழ்நாடு நாள் மணற்சிற்பத்தை மெரினா கடற்கரையில் ஒடிசாவை சேர்ந்த சுதர்சன் பட்நாயக் உருவாக்குகிறார். தமிழ்நாடு நாள் வரலாறு குறித்த தகவல்கள் அடங்கிய நூல் சிறப்பு மலராக நிகழ்ச்சியில் வெளியிடப்படுகிறது. மணல் சிற்பம், சிறப்பு கண்காட்சி ஜூலை 18 முதல் 20 வரை பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட உள்ளது. இவ்விழாவில் பங்கேற்று முதலமைச்சர் முக ஸ்டாலின் பேருரையாற்றவுள்ளார்.

மேலும், தமிழ்நாடு நாள் விழாவில், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்கவுள்ளார்கள். இந்நிகழ்ச்சியினை சமூக ஊடகங்கள் மற்றும் தமிழ்நாடு அரசு கேபிள் தொலைக்காட்சியின் மூலம் நேரலையில் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்