பின் பனி ஓய்வடைவதில்லை போலும்…!!! நடுங்க வைக்கும் குளிர் இன்னமும் நீடிக்கும்…!!! வானிலை மையம் தகவல்…!!!
தமிழகத்தில் தற்போது தை மாதம் பிறந்துள்ள நிலையிலும் வானிலை மட்டும் சீராக இல்லாத நிலை உள்ளது.இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துவருகின்றனர்.இந்நிலையில், தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மேகக்கூட்டங்கள் குறைவால் பனி அதிகரித்து காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் தை பிறந்தால் வழி பிறக்கும் என காத்திருக்கும் பொதுமக்கள் சற்று பொறுத்து தான் ஆகவேண்டும்.இந்த வானிலை அறிவிப்பு மக்களிடையே கடும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
DINASUVADU.