தமிழகம்- புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு..!மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்..!வானிலை
- தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
- சூறைகாற்று வீசுவதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழத்தில் இந்தாண்டு எதிர்பார்த்த அளவை விட அதிகமாகவே மழை பொழிவானது இருந்தது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.தற்போது குளிர் நிலவி வருகிறது. இதற்கிடையில் அவ்வபோது மழை பொழிவும் ஏற்படுகிறது.இந்நிலையில் தற்போது இது குறித்த தகவலை வானிலை ஆய்வு மையல் தெரிவித்துள்ளது.அதில்தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த சுழற்சியால் அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புக்கு வாய்ப்புள்ளது என்றும் தெற்கு அரபிக்கடலில் சூறைகாற்று வீசுவதால் மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தி உள்ளது.