தமிழத்தில் இந்த 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….
நீலகிரி, கோவை , தேனி, திண்டுக்கல், தென்காசி, திருப்பூர் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. வானிலை ஆய்வு மையமும் , அதற்கு ஏற்றார்போல, எச்சரிக்கைகளை கொடுத்து வருகிறது.
இந்நிலையில், தற்போது வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை கொடுத்துள்ளது. அதன் படி,நீலகிரி, கோவை , தேனி, திண்டுக்கல், தென்காசி, திருப்பூர் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என அறிவுறுத்தியுள்ளது.