நிலத்தடி நீரை எடுக்க……..கிடுக்குபிடி_போட்ட உயர்நீதிமன்றம்…….கண்டித்து களமிரங்கிய லாரிகள்…!!பதறிய அமைச்சர்…….!!பரிதவிக்கும் மக்கள்…!!!
நிலத்தடி நீரை எடுக்க உயர்நீதிமன்றம் கிடுக்குப்பிடி நிபந்தனைகளை விதித்துள்ளதைக் கண்டித்து தனியார் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் களமிரங்கி உள்ளது மக்கள் அவதிப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் நிலத்தடி நீரை எடுக்க உயர்நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளை விதித்து உத்தரவிட்டுள்ளது.இந்த உத்தரவை கண்டித்து தனியார் லாரி உரிமையாளர்கள் திங்கட்கிழமை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனை அடுத்து குடிநீர் இன்றி பாதிக்கப்படும் மக்களுக்கு உடனடியாக தண்ணீர் வழங்க அமைச்சர் வேலுமணி உத்தரவிட்டுள்ளார்.மேலும் பாதிப்புக்கு உள்ளான மருத்துவமனைகள், வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் அடுக்குமாடி கட்டிடங்களில் இருக்கும் வீடுகளுக்கு உடனடியாக தண்ணீர் வழங்கவும் அவர் உத்தரவிட்டார்.
இது குறித்து தெரிவித்த அமைச்சர் வேலுமணி தண்ணீரை பெற சென்னை குடிநீர் வாரியத்திற்கு முறையான விண்ணப்பத்துடன் குறைந்தபட்சம் ஒரு வார காலத்திற்கு தேவையான குடிநீர் கட்டணத்தை முன்னரே செலுத்தினால் நாளொன்றுக்கு அதிகபட்சமாக ஒரு லாரிக்கு இரண்டு நடைகள் வீதம் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU