அன்லாக் 3.0: தமிழகத்தில் இ பாஸ் கட்டாயம்.. மற்றவைக்கு அனுமதி மற்றும் தளர்வுகள் இதோ!
தமிழகத்தில் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 7-ம் கட்ட ஊரடங்கு அமலுக்கு வருகிறது.
தமிழகத்தில் பொதுமுடக்கம் நாளையுடன் முடிவடையவுள்ள நிலையில், மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டம் முடிவடைந்த நிலையில், தமிழகத்தில் 7-ம் கட்ட ஊரடங்கு, ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீடிக்கப்படுவதாக முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளர்.
அதன்படி, பல்வேறு கட்டுப்பாடுகளும், சில தளர்வுகளுடனும் ஆகஸ்ட் 31 -ம் தேதி நள்ளிரவு 12 மணிவரை தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்படுகிறது.
மேலும், ஜூலை மாதத்தை தொடர்ந்து, ஆகஸ்ட் மாதத்திலும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் எந்தவித தளர்வு இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் (நோய் கட்டுப்பாடு பகுதிகளை தவிர) அனுமதி, தளர்வுகள்:
- 50 சதவீத தொழிலாளர்களுடன் செயல்படும் நிறுவனங்கள், தற்பொழுது 75 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதி.
- உணவகங்கள், தேநீர் கடைகளில் காலை 6 மணி முதல் இரவு 7 மணிமுதல் வரை அனுமதி.
- உணவகங்கள், தேநீர் கடைகளில் 50% இருக்கைகளில் மட்டும் அமர்ந்து உணவு அருந்த அனுமதி.
- காய்கறி மற்றும் மளிகை கடைகள், காலை 6 மணி முதல் இரவு 7 மணிவரை இயங்க அனுமதி.
- சிறிய கோவில்கள், மசூதிகள், தேவாலயங்களில் மட்டும் பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதி.
- அத்தியாவசிய பொருட்கள், ஆன்லைன் மூலம் வழங்க அனுமதி.
- அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் கடைகளை தவிர்த்து, மற்ற கடைகள் அனைத்தும் காலை 10 மணி முதல் இரவு 7 மணிவரை இயங்க அனுமதி.
தமிழகம் முழுவதும் (நோய் கட்டுப்பாடு, சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளை தவிர) அனுமதி, தளர்வு:
- சிறிய கோவில்கள், மசூதிகள், தேவாலயங்களில் மட்டும் பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதி.
- 5 நபருக்கு மேல் கூட அனுமதி இல்லை.
- நோய் கட்டுப்பாடு பகுதிகளில் தளர்வுகளில்லா பொதுமுடக்கம் அமலில் இருக்கும்.
- ரயில் மற்றும் விமான போக்குவரத்தைப் பொறுத்தவரை தற்போதுள்ள நிலையே தொடரும்.
- மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு இ பாஸ் கட்டாயம் பெறவேண்டும்
- ஆகஸ்ட் 15-ம் தேதி முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி, சுதந்திர தினம் கொண்டாட அனுமதி.
மறுஉத்தரவு வரும் வரை மூடல்:
- மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து வழிபாட்டுதலம் மற்றும் தமிழ்நாட்டில் அனைத்து பகுதியிலும் உள்ள மிகப்பெரிய வழிபாட்டு தலங்ககளிலும் பொதுமக்கள் வழிபாடு கிடையாது.
- அனைத்தும் வகையான கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்களுக்கு மறுஉத்தரவு வரும் வரை தடை.
- திரையரங்குகள், ஜிம்கள், நீச்சல் குளங்கள், வணிக வளாகங்கள், கேணிக்கை கூடங்கள், சுற்றுலா தளங்கள், கடற்கரைகள், உள்ளிட்டவை மறுஉத்தரவு வரும்வரை மூடப்பட்டிருக்கும்.
- பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள்.
- சுற்றுலா தலங்களுக்கும் வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல தடை.
- தங்கும் வசதியுடன் கூடிய ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள் பிற விருந்தோம்பல் சேவைகளுக்கு தடை.
- மாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு இடையிலான பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்திற்கு தடை.
- மெட்ரோ மற்றும் மின்சார ரயில்களுக்கு தடை.
- சர்வதேச விமான போக்குவரத்து.
போன்றவற்றுக்கு தடை விதித்து முதல்வர் பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.