“தமிழக மரங்கள் பாதுகாப்பு சட்டம் கர்நாடகத்தை போல்”வேண்டும் சுற்றுச்சுழல்-வனத்துறை உங்கள் பதில் என்ன..?உயர்நீதிமன்ற கிளை…!!
தமிழகத்தில் மரங்கள் பாதுகாப்பு சட்டம் கொண்டு வருவது குறித்து தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மேலும் இது கர்நாடக மாநிலத்தில் செயல்படுத்த படுகிறது அதனை போன்று தமிழகத்திலும் மரங்கள் பாதுகாப்பு சட்டம் கொண்டு வருவது குறித்து தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளர் பதிலளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் 150 ஆண்டுகள் பழமையான வேப்பமரத்தை வெட்ட எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட இந்த வழக்கில் கர்நாடக மரங்கள் பாதுகாப்புச் சட்டத்தில் மரங்களை வெட்ட மக்களிடம் கலந்தாலோசித்தல் உள்ளிட்ட பல்வேறு விதிகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மனுவை விசாரித்த நீதிபதிகள் வேப்ப மரத்தை வெட்ட இடைக்காலத் தடை விதித்தனர்.
மேலும் இந்த வழக்கு தொடர்பாக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.இந்த சட்டம் வரும் பட்சத்தில் மரங்கள் வெட்டப்படுவது குறைக்கப்படும் என்று தெரிகிறது.
DINASUVADU