தமிழகத்தில் டாஸ்மாக் மூட காரணம் என்ன ?

தமிழகத்தில் டாஸ்மாக் மூட காரணம் என்ன ?
இந்தியா முழுவதும் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக மூன்றாம் கட்ட ஊரடங்கு மே 17ம் தேதி பிறப்பிக்கப்பட்டது. இதனால் நாடு முழுவதும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க மட்டும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கியுள்ளனர்.
இந்நிலையில், தமிழகத்தில் கடந்த மே 7ம் தேதி டாஸ்மாக் கடைகளை திறக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்தது. மதுபானங்களை வாங்க வருபவர்கள் முகக்கவசம், தனிநபர் இடைவெளி போன்ற கட்டுபாடுகளை உயர்நீதிமன்றம் விதித்தது. இதற்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் மற்றும் மக்கள் நீதி மையம் கட்சிகள் என அனைவரும் தங்களது எதிர்ப்பை தெறிவித்து வந்தனர்.
இந்நிலையில், மக்கள் நீதி மையம் சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க நேற்று பிறப்பித்த உத்தரவு முழுமையாக பின்பற்றவில்லை என்றும் தனிநபர் இடைவெளி பின்பற்றப்படவில்லை என்று கூறியுள்ளனர்.
இதை நிருபிக்கும் விதமாக புகைப்பட ஆதாரங்களை எடுத்துக் காட்டியுள்ளனர். இதனால் சென்னை உயர்நீதிமன்றம் டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி இல்லை என்று கூறியுள்ளது. அதற்கு பதிலாக ஆன்லைன் மூலமாக பெற்றுக்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்படும் என்றுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025