தமிழக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மாற்றம் – தமிழக அரசு

பள்ளிக்கல்வித் துறை செயலாளர் பிரதீப் யாதவ் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் 5, 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு 60 மதிப்பெண் அடிப்படையில் தான் எழுத்து தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.இந்த அறிவிப்பு மாணவர்களுக்கு பெரும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் அமையும் என கல்வியாளர்கள் குற்றம் சாட்டினர்.பின்னர் 5, 8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.
இந்நிலையில் பள்ளிக்கல்வித் துறை செயலாளர் பிரதீப் யாதவ் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பள்ளிக் கல்வித்துறையின் புதிய செயலாளராக தீரஜ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழக பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் கைத்தறி முதன்மை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு குழப்பங்களால் அவர் மாற்றப்பட்டிருக்கலாம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025