பொதுத் தேர்வு..! தமிழக பள்ளிக்கல்வித்துறை முக்கிய உத்தரவு

தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வை நடத்துவதற்கு மாவட்ட அளவில் கண்காணிப்பு அலுவலர்களை நியமனம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கான செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 12ஆம் தேதி முதல் துவங்க உள்ளது.

இந்த நிலையில் பொதுத் தேர்வு பணிகளை கண்காணிக்க, மாவட்ட வாரியாக பள்ளிக்கல்வித் துறையில் மாநில அளவில் பணியாற்றும் இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் உள்ளிட்டோர் தற்போது நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: வெளிநாட்டில் இருந்து காணொளி வாயிலாக முதல்வர் மு.க ஸ்டாலின் ஆலோசனை

இவர்களை நியமனம் செய்து பள்ளிக்கல்வித் துறை செயலாளர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி 38 மாவட்டங்களுக்கும் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்