இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம்.. அறிவித்தது மத்திய அரசு… தமிழக அரசுக்கும் பாராட்டு…
- இந்தியாவில் உள்ள மாநிலங்களில் சிறப்பான நிர்வாகம் நடக்கும் மாநிலங்கள் எவை, எவை என்று மூன்று பிரிவாக பிரிக்கப்பட்டு இந்த ஆய்வு மத்திய அரசின் நிர்வாகத் சீர்திருத்தத்துறையால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
- இதில் தமிழ்நாடு இந்தியாவிலே முதல் மாநிலமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இதில் மாநிலங்களில் நிலவும் சட்டம் ஒழுங்கு, பொதுமக்கள் பாதுகாப்பு, மாநில உள்கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. மேலும் இதில், விவசாயம், தொழில் ஆகியவையும் இந்தக் கணக்கெடுப்பில் ஆய்வு செய்யப்பட்டது.
இதன் அடிப்படையில் எந்தெந்த மாநிலங்கள் நிர்வாகத் திறமையில் சிப்பாக உள்ளன என்ற பட்டியல் தயாரிக்கப்பட்டது. இன்று தேசிய நல்லாட்சி தினம் கடைப்பிடிக்கப்படுவதை தொடர்ந்து அந்தப் பட்டியலை இன்று மத்திய அரசின் நிர்வாக சீர்திருத்தத்துறை வெளியிட்டது. இதில், நிர்வாகத்தில் சிறப்பாக திகழும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தை பிடித்துள்ளது. சட்டம் ஒழுங்கு, பொதுமக்கள் பாதுகாப்பு, உள் கட்டமைப்பு போன்றவைகளில் தமிழகம் 5.62 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளது. இந்த தகவல் தமிழக மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.