தமிழ்நாடு செவிலியர் கவுன்சிலில் திருநங்கை ரக்ஷிகா பெயர் பதிவு..!
திருநங்கை ராக்ஷிகா செவிலியர் படிப்பை முடித்துவிட்டு தமிழ்நாடு செவிலியர் கவுன்சிலில் பதிவு செய்ய விண்ணப்பித்த போது மூன்றாம் பாலின பெண் என தன்னை பதிவு செய்த விண்ணப்பத்தை நிராகரித்ததாக கூறி திருநங்கை ராக்ஷிகா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன் வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வாதிடும்போது மூன்றாம் பாலினத்தவர் பதிவு குறித்த கவுன்ஸில் விதிகளில் திருத்தம் செய்ய இருப்பதாகவும் , ராக்ஷிகா பெயரை மூன்றாம் பாலினத்தவர் என பதிவு செய்ய இடைக்கால ஏற்பாடு செய்ய உள்ளதாகவும் கூறினார்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி தமிழ்நாடு கவுன்சில் சட்ட விதிகளில் திருத்தம் கொண்டு வர வரை திருநங்கை ராக்ஷிகா பெயரை தற்காலிகமாக செவிலியர் கவுன்சிலில் பதிவு செய்ய உத்தரவிட்டார்.