தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு…! சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .
நேற்று ரெட் அலர்ட் எச்சரிக்கை திரும்பப் பெறப்படுகிறது என்று அறிவித்தது வானிலை ஆய்வு மையம்.இதன் பின்னர் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் ,தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் அறிவிப்பு வெளியிட்டது. அதாவது வருகின்ற 9 ஆம் தேதி வரை கனமழை பெய்யும்.
இந்நிலையில் இன்று மீண்டும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஓன்று வெளியிட்டுள்ளது.அதில் தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு கன்னியாகுமரி, நெல்லை, தேனி, திண்டுக்கல், நீலகிரி மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.வங்கக்கடல் பகுதியில் இன்று முதல் 9ஆம் தேதி வரை மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.