#Breaking:தமிழகத்தில் உச்சத்தை தொட்ட கொரோனா 34 ஆயிரம் பாதிப்பு;365 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் இன்று மட்டும் 34,867 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு !
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 34,867 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது, மேலும் இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16,99,225 பேராக அதிகரித்துள்ளது, அதிகபட்சமாக சென்னையில் இன்று மட்டும் 6,297 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று மட்டும் 365 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.இதுவரை தமிழகத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 18,734 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெறிவித்துள்ளது.
மேலும் இன்று கொரோனாவிலிருந்து 23,863 பேர் குணமடைந்த நிலையில், இதுவரையிலும் 14,26,915 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 2,53,576 பேர் சிகிச்சையில் உள்ளதாகவும், தமிழகத்தில் இன்று மட்டும் 1,70,355 கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுவரை தமிழகத்தில் 2,56,04,311 பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : பூமிக்குத் திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் முதல்… அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கட் வரை.!
March 19, 2025
“நான் பாத்துக்குறேன் பங்கு”..மும்பை கேப்டனாகும் சூரியகுமார் யாதவ்! பாண்டியாவுக்கு BCCI செக்?
March 19, 2025
மஞ்சள் நிற ரேஷன் கார்டு., குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000! புதுச்சேரி முதலமைச்சர் அறிவிப்பு!
March 19, 2025