இன்று நடைபெற்ற தமிழகச் சட்டப்பேரவையில் 110விதியின் கீழ் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 1956ஆம் ஆண்டு மாநிலப் பிரிவினைக்குப் பிறகு, சென்னை மாகாணம் என்னும் பெயரை மாற்றித் தமிழ்நாடு எனப் பெயர் சூட்டக் கோரி விருதுநகரில் சங்கரலிங்கனார் 75நாட்கள் உண்ணாநோன்பிருந்து உயிர்நீத்ததைக் குறிப்பிட்டார்.
1967ஆம் ஆண்டு அண்ணா முதலமைச்சராக இருந்தபோது சென்னை மாகாணத்துக்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டச் சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதையும், 1969 ஜனவரி 14ஆம் நாள் தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டதையும் குறிப்பிட்டார். தமிழ்நாடு எனப் பெயர் சூட்டப்பட்டு வரும் 14ஆம் தேதி 50ஆண்டு ஆவதைத் தமிழ்நாடு பொன்விழா ஆண்டாகக் கொண்டாட அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்தார்.
இதையொட்டித் தமிழ்மொழி மற்றும் தமிழர்களின் பெருமையைப் பறைசாற்றும் வகையில், கலை, விளையாட்டு, கட்டுரை, கவிதை, பேச்சுப் போட்டி ஆகியவை சென்னையிலும், அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார். தமிழ் ஆராய்ச்சியில் சிறந்து விளங்கும் இளம் தமிழ் ஆய்வாளர்கள் தெரிவு செய்யப்பட்டுச் சென்னையில் நடைபெறும் நிறைவு விழாவில் சிறப்பிக்கப்படுவார்கள் என்றும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.
source: dinasuvadu.com
ஜார்க்கண்ட் : காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் (ஏடிசி) அனுமதி…
சென்னை -திருக்கார்த்திகை ஸ்பெஷல் அப்பம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; வெல்லம் =முக்கால்…
சென்னை : சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான நிலையில், வெளியாகி 15 நாட்களைக் கடந்து…
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…