கேரளாவை ஒப்பிட்டு பார்த்து சொல்ல வேண்டும்.! மின் கட்டண உயர்வுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதில்.!
அண்டை மாநிலமான கேரளாவில் நிலவும் மின்சார கட்டணம் பற்றி தெரிந்து கொண்டு ஒப்பிட்டு கருத்து கூற வேண்டும், எனவும், புது புது தொழிற்சாலைகள் தமிழகத்தில் நிறுவப்படும்போது, மின்சாரத்தேவை அதிகரிக்கும் எனவும் குறிப்பிட்டு பேசினார் தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி.
தமிழகத்தில் மின்கட்டணத்தை தமிழக அரசு அண்மையில் கணிசமாக உயர்த்தியது. இதற்கு எதிர்கட்சியினர் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். அதுமட்டுமின்றி, ஆளும் திமுகவுடன் கூட்டனில் இருக்கும் காட்சிகளில் ஒன்றான கம்யூனிஸ்ட் (சி.பி.எம்) கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள் விமர்சித்து இருந்தார்.
ஆளும் கட்சி செயல்பாட்டுக்கு எதிரான கூட்டணி கட்சி தலைவரின் விமரசனம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த மின்சார கட்டண உயர்வு குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசினார் தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி.
அவர் கூறுகையில், ‘ அண்டை மாநிலமான கேரளாவில் நிலவும் மின்சார கட்டணம் பற்றி தெரிந்து கொண்டு ஒப்பிட்டு கருத்து கூற வேண்டும் என கூறினார். மேலும், கடந்த 2006-2011 ஆம் ஆண்டு மின்சார தேவை முந்தைய ஐந்தாண்டை ஒப்பிடுகையில் 49 விழுக்காடு அதிகரித்து இருந்தது.
அதே போல அடுத்த ஐந்தாண்டில் அந்த மின்சார தேவை 26 விழுக்காடாக அதிகரித்துள்ளது. வரும் காலத்தில் இந்த மின்சார தேவை 50 விழுக்காடாக அதிகரிக்கும் என அமைச்சர் கூறினார். அதாவது புது புது தொழிற்சாலைகள் தமிழகத்தில் நிறுவப்படும்போது, மின்சாரத்தேவை அதிகரிக்கும் என குறிப்பிட்டார். அதனை நிவர்த்தி செய்ய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது என குறிப்பிட்டார்.