ஷட்டர் பழுதடைந்த பாலக்காடு, பரம்பிக்குளம் அணையை பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், ‘ அணையில் இருந்து நீர் வெளியேறுவதை பார்க்கையில் மனம் வேதனைப்படுகிறது.’ என குறிப்பிட்டார்.
கேரளா மாநிலம் பாலக்காட்டில் அமைந்திருக்கும், பரம்பிக்குளம் அணை தான் கேரள மாநிலம் பாலகாடு, திருசூர் உட்பட தமிழகத்தில் கோவை சுற்றுவட்டார பகுதிக்கும் நீர் ஆதாரமாக திகழ்கிறது.
அந்த பரம்பிக்குளம் அணையில் நேற்று அதிகாலை 1 மணி அளவில் தண்ணீர் திறக்கும் மதகு (ஷட்டர் செயின்) பழுதடைந்த காரணத்தால், ஷட்டர் தானாக திறந்து அணையில் உள்ள நீர் வெளியேறி அருகில் உள்ள கிராமங்களில் வெள்ளம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டு விட்டது.
இதனை அடுத்து, பரம்பிக்குளம் அணையில் இருந்து வரும் நீர் வழிப்பாதையில் இருக்கும் கிராமங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு, மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுளள்னர்.
இந்த அணை கேரளாவில் இருந்தாலும் , தமிழகத்திற்கும் நீர் ஆதாரமாக இருப்பதால் தமிழக அரசும் இதன் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
இன்று, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அமைச்சர் செந்தில் பாலாஜி, நீர் வளத்துறை முதன்மை செயலர் சந்தீப் சக்சேனா ஆகியோர் பரம்பிக்குளம் அணையில் உடைந்த பகுதிகளை பார்வையிட்டனர்.
அதனை பார்த்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், ‘ நான் வந்து பார்க்கும் போது, 16,500 கன அடி நீர் வெளியேறி வருகிறது. அதற்கு முன்னர் 20 ஆயிரம் கன அடி நீர் வெளியேறி வந்துள்ளது. தண்ணீர் வெளியேறும் காட்சியை பார்க்கையில் மனம் வேதனை அடைகிறது. கிட்டத்தட்ட 6 டிஎம்சி அளவு நீர் வெளியேறி இருக்கும்.
தண்ணீர் குறிப்பிட்ட அளவு வெளியேறிய பிறகு தான் ஷட்டர் பிரச்சனையை சரி செய்ய முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.’ என பேசியுள்ளார் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…