நேற்று நள்ளிரவில் தெற்கு மன்னர் வளைகுடா பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் மீது இந்திய கடலோர காவல்படையினர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர் – தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் 6 பேர் உட்பட 10 மீனவர்கள் இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்து வந்துள்ளனர். அப்போது நேற்று நாளிரவு அவர்கள் மீது இந்திய காவல் படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதாக தெரிகிறது.
இதில் மயிலாடுதுறையை சேர்ந்த வீரவேல் எனும் மீனவர் மீது குண்டு பாய்ந்தது. அதன் பிறகு அவர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதன் பிறகு குண்டுகளை அகற்றுவதற்கு மேல் சிகிச்சை செய்வதற்கும் மதுரை அரசு மருத்துவமனையில் தற்போது மீனவர் வீரவேல் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
சிகிச்சை பெற்று வந்த மீனவர் வீரவேலை, தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேரில் பார்த்து நலம் விசாரித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அதில், ‘ நேற்று நள்ளிரவில் தெற்கு மன்னர் வளைகுடா பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் மீது இந்திய கடலோர காவல்படையினர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர் அதில், வீரவேல் எனும் மீனவர் மீது குண்டு பாய்ந்துள்ளது. அவர் தற்போது சுயநினைவுடன் இருக்கிறார். அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ‘ என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்னன் தெரிவித்தார்.
டெக்ஸாஸ் : உலகம் முழுவதும் பலரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருந்த மைக் டைசன் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த யூட்யூபர் ஜேக்பால்…
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை 2 வாரங்களுக்கு பின் நேற்று உயர்ந்த நிலையில், இன்று மீண்டும் குறைந்துள்ளது. அதன்படி,…
சென்னை : கங்குவா திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்று மிகப்பெரிய ஹிட் ஆகும் நிலையில் , வெளியான நாளிலிருந்தே…
திருவனந்தபுரம் : கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் சபரிமலையில் அமைந்துள்ள ஐயப்பன் கோயில் நேற்று மாலை மண்டல பூஜைக்காக திறக்கப்பட்டது.…
சென்னை : கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று (நவம்பர் 16) சர்வதேச கருத்தரங்கு ஒன்று நடைபெற உள்ளது. இதில்…
தென்னாபிரிக்கா : இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி தொடரை…