தமிழகத்தில் வினியோகிக்கப்படும் பாலில் நச்சு தன்மை அதிகளவில் உள்ளது!
மக்களவையில் இன்று திமுக எம்.பி டி.ஆர் பாலு தமிழகத்தில் உணவு சுகாதாரம் பற்றி கேள்வி எழுப்பினார். அதற்க்கு பதிலளிக்கும் வகையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அஷ்வினி குமார் சவுபே சில அதிர்ச்சி தகவல்களை தெரிவித்துள்ளார்.
அவர் பேசுகையில், தமிழகத்தில் விநியோகிக்கப்படும் பாலில் அப்ஃளாடாக்ஷின் எம்1 ( Aflatoxin M1 ) எனும் நச்சுத்தன்மை அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருக்கிறது எனவும். இது குறித்து 88 மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அதனை உணவு தரக்கட்டுப்பாடு மையம் ஆராய்ச்சி செய்தது. அதில் தான் இந்த முடிவுகள் கிடைக்கப்பெற்றன. எனவும்,
மேலும், தமிழகம், கேரளா, டெல்லி என மூன்று மாநில பால்களில் தான் நச்சுத்தன்மை அதிகம் எனவும், அதில் தமிழகமே பால் நச்சுத்தன்மையில் முதலிடம் என கூறியுள்ளார்.