காஷ்மீர் பனிபொழிவில் சிக்கி தவித்து வரும் தமிழக லாரி ஓட்டுனர்கள்!

- தற்போது பனிக்காலம் என்பதால் காஷ்மீர் உள்ளிட்ட வட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு பெய்து வருகிறது.
- சேலம், நாமக்கல் ஆகிய ஊர்களில் இருந்து காஷ்மீர் ஸ்ரீநகர், லாடக் பகுதிக்கு சென்ற லாரி ஓட்டுனர்கள் அங்கு கடும் பனிபொழிவில் சிக்கியுள்ளனர்.
தற்போது குளிர் காலம் தொடங்கிவிட்டதால், வடமாநிலங்களில் கடும் குளிர் வாட்டி வதைக்கிறது. காஷ்மீர் உள்ளிட்ட வட மாநிலகங்களில் பனிப்பொழிவு அதிகமாக காணப்படுகிறது.
இந்நிலையில் சேலம், நாமக்கல் பகுதியில் இருந்து சுமார் 300க்கும் மேற்பட்ட ஓட்டுனர்கள் பனிப்பொழிவில் சிக்கியுள்ளனர். அவர் காஷ்மீர், லடாக் பகுதியில் பெய்யும் கடும் பனிப்பொழிவு காரணமாக அங்கிருந்து மீண்டுவர முடியாமல் 10 நாட்களுக்கு மேலாக சரியான உணவின்றி தவித்து வருகின்றனர்.
இவர்களை மீட்க காஷ்மீர் அரசுடன் தமிழக அரசு அதிகாரிகள் பேச்சுவர்த்தை நடத்தி வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
பயங்கரவாத தாக்குதலில் தமிழர் சந்துரு சிக்கினாரா.? நடந்தது என்ன? மனைவி கொடுத்த விளக்கம்.!
April 23, 2025
பஹல்காம் பயங்கரவாதிகள் தாக்குதல்…உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் நிவாரணம்!
April 23, 2025