தமிழகத்தில் 27 மாவட்டங்களில் மட்டும் உள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு கடந்த டிசம்பர் மாதம் தேர்தல் நடைபெற்றது. அதற்கான வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2ஆம் தேதி முதல் தொடங்கி 3ஆம் தேதி நடைபெற்றது.
27 மாவட்டங்களில் உள்ள 515 மாவட்ட ஊராட்சிகளில் 240 இடங்களில் அதிமுகவும், 271 இடங்களில் திமுகவும் வெற்றிபெற்றது. அதேபோல 5090 ஊராட்சி ஒன்றிய வார்டுகளில் 2199 இடங்களில் அதிமுகவும், 2356 இடங்களில் திமுகவும் வெற்றிபெற்றுள்ளது.
இதனை தொடர்ந்து நாளை தேர்தல் நடைபெற்ற 27 மாவட்டங்களுக்கும் மாவட்ட ஊராட்சி தலைவர்(27), மாவட்ட ஊராட்சி துணை தலைவர்(27), ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்(314), ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர்(314), ஊராட்சி துணை தலைவர்(9624) ஆகிய பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 10,306 பதவிகள் நிரப்பப்பட உள்ளன. இதில் நடைபெற்று முடிந்த ஊராட்சி தேர்தல்களில் வெற்றிபெற்றவர்கள் வாக்களிக்க உள்ளனர்.
செங்கல்பட்டு : திருப்போரூர் அருகே கார் மோதி 5 பெண்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பகுதியில் உள்ள…
சென்னை : பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை தற்போதைய தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது என்றும், அதற்கு மாற்றாக சமூகநீதி அடிப்படையில், தமிழ்நாட்டிலுள்ள…
சென்னை : ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று மாலை 5.30 மணிக்கு புயலாக வலுவடையும் என வானிலை ஆய்வு…
தானே : அண்மையில் நடைபெற்று முடிந்த மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மாபெரும் வெற்றி…
சென்னை : வங்கக்கடலில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், இன்று மாலை 5.30 மணிக்குள் புயலாக வலுப்பெறும் என…
மும்பை : இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடனான 5 போட்டிகள் அடங்கிய பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடி…