முதலிடத்தில் தமிழ்நாடு.! 58 பொருட்களுக்கு புவிசார் குறியீடு.! டாப் லிஸ்ட் இதோ…
சென்னை : இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தனித்தன்மை வாய்ந்து சில பொருட்கள் மதிப்பளிக்கப்படும். காஞ்சிபுரம் பட்டு , திண்டுக்கல் பூட்டு , மதுரை மல்லி என அந்த இடத்தில் குறிபிட்ட பொருட்கள் தனித்தன்மை வாய்ந்து மக்கள் மத்தியில் புகழ்பெறும்.
அந்த தனித்தன்மை வாய்ந்த பொருட்களை மற்ற இடங்களில் வியாபார நோக்கத்திற்காக அதே பெயரில் தயாரித்துவிட கூடாது என மத்திய அரசு அந்த இடத்தின் பெருமையாக விளங்கும் பொருட்களுக்கு புவிசார் குறியீடு (Geographical Indication Tag) வழங்கி வருகிறது.
இவ்வாறு மாநில வாரியாக புவிசார் குறியீடு பெற்ற பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் இதுவரை 58 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்று முதலிடத்தில் உள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு மட்டும் தமிழ்நாட்டில் 11 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்த இடங்களில் கர்நாடகா மற்றும் உத்திர பிரதேசம் ஆகிய மாநிலங்கள் உள்ளன.
தமிழகத்தில் புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள் விவரங்கள்…
- சேலம் வெண்பட்டு,
- மதுரை சுங்குடி சேலை,
- காஞ்சிபுரம் பட்டு,
- பவானி ஜமக்காளம்,
- ஆரணி பட்டு,
- கோயம்புத்தூர் மாவு அரைக்கும் இயந்திரம் (Wet Grinder),
- தஞ்சாவூர் ஓவியங்கள்,
- தஞ்சாவூர் கலைத்தட்டு,
- தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை,
- தஞ்சாவூர் வீணை,
- தஞ்சாவூர் கலைத்தட்டு இலச்சினை,
- தஞ்சாவூர் நெட்டி வேலைப்பாடு,
- நாகர்கோவில் கோயில் நகைகள்,
- திருச்சி கிழக்கிந்திய தோல்,
- சேலம் பேப்ரிக் துணிகள்,
- நீலகிரி தேயிலை,
- கோவை கோரப்பட்டு சேலை,
- சுவாமிமலை வெண்கல சிலை,
- ஈத்தாமொழி நெட்டை தென்னை,
- நரசிங்கபேட்டை நாதஸ்வரம்,
- சிறுமலை மலை வாழை,
- விருப்பாச்சி மலை வாழை,
- மதுரை மல்லிகை,
- பத்தமடை பாய்,
- ஈரோடு மஞ்சள்,
- மகாபலிபுரம் கற்ச்சிற்ப்பம்,
- நாகர்கோவில் கோயில் நகை இலச்சினை,
- சுவாமிமலை வெங்கல சிலை இலக்கினை,
- மலபார் மிளகு,
- நீலகிரி பாரம்பரிய பூத்தையல்,
- காரைக்குடி செட்டிநாடு கோட்டான்கள்,
- நாச்சியார் கோவில் குத்துவிளக்கு,
- திருபுவனம் பட்டு சேலை,
- கொடைக்கானல் மலைப்பூண்டு,
- பழனி பஞ்சாமிர்தம்,
- திண்டுக்கல் பூட்டு,
- ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா,
- கோவில்பட்டி கடலை மிட்டாய்,
- அரும்பாவூர் மரச்சிற்பம்,
- கருப்பூர் கலம்காரி ஓவியங்கள்,
- கன்னியாகுமரி கிராம்பு,
- வேலூர் முள்ளு கத்தரிக்காய்,
- ராமநாதபுரம் குண்டு மிளகாய்,
- மணப்பாறை முறுக்கு,
- மார்த்தாண்டம் தேன்,
- மயிலாடுதுறை பிரம்பு வேலைப்பாடுகள்,
- தூத்துக்குடி ஆத்தூர் வெற்றிலை,
- சோழவந்தான் வெற்றிலை,
- கம்பம் பன்னீர் திராட்சை,
- நெகமம் காட்டன் சேலை,
- மயிலாடி கற்ச்சிற்பம்,
- சேலம் ஜவ்வரிசி,
- ஊட்டி வறுக்கி,
- மானாமதுரை மண்பாண்டம்,
- நீலகிரி மரபு வழி,
- காரைக்குடி கண்டாங்கி சேலை,
- ஊத்துக்குளி வெண்ணெய்,
- உடன்குடி பனங்கருப்பட்டி.