#Breaking : 15 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.! வானிலை ஆய்வு மையம் தகவல்.!
தமிழகத்தில் இன்று டெல்டா மாவட்டங்கள் உட்பட 15 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதற்கான முன்னறிவிப்பை வானிலை ஆய்வு மையம் வழங்கி வருகிறது.
அதன்படி, தற்போது தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. டெல்டா மாவட்டங்களிலும், தென்காசி, திண்டுக்கல், தேனி, நெல்லை, கன்னியாகுமரி, மதுரை, விருதுகள், ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, புதுக்கோட்டை, ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.