தீபாவளி முன்னெச்சரிக்கைகள்.! அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் அதிரடி உத்தரவு.!

ஆரம்ப சுகாதார நிலையங்கள் முதல் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை வரையில் தீக்காயங்களுக்கு சிகிச்சைக்கான மருந்துகள் பற்றாக்குறை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். – தமிழக சுகாதாரத் துறை இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.  

வரும் அக்டோபர் 24ஆம் தேதி இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகமாக கொண்டப்பட உள்ளது.  இதற்கான புத்தாடை விற்பனை , பட்டாசு விற்பனை என படு ஜோராக மக்கள் தயாராகி வருகின்றனர் .

அதற்கேற்றாற் போல, அரசும் பாதுகாப்பான தீபாவளிக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது , தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம் அவர்கள் அனைத்து மாவட்ட மருத்துவமனைகளுக்கும் வழங்கியுள்ளார்.

அதன்படி, தீபாவளி பண்டிகையை ஒட்டி, பட்டாசு வெடிக்கும் போது தீ காயங்கள், தீவிபத்துக்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. அதனால், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் முதல் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை வரையில் தீக்காயங்களுக்கு சிகிச்சை எடுக்க மருந்துகள் பற்றாக்குறை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

தீபாவளி சமயத்தில் விபத்து ஏற்படவும் அதிக வாய்ப்புள்ளது ஆதலால், அதனை குறிப்பிட்டு, அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசு சார்பில், பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம் அனைத்து மருத்துவமனைகளுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது போக பொதுவான முன்னெச்சரிக்கைகள் என, பொதுமக்கள் பட்டாசு வெடிக்கும் போது பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். குழந்தைகள் பட்டாசு வெடிக்கும்போது பெற்றோர்கள் கவனமாக பாத்துக்கொள்ள வேண்டும், கைகளில் வைத்து பட்டாசுகளை வெடிக்கவே கூடாது. செருப்பு அணிந்து பட்டாசு வெடிக்க வேண்டும். அருகில் தண்ணீர் வைத்துக் கொள்ள வேண்டும். மின் சாதனங்கள் இருக்கும் இடத்தில் பட்டாசு வெடிக்கக் கூடாது. தீக்குச்சி மற்றும் கேண்டில்கள் உதவியுடன் பட்டாசு வெடிக்க கூடாது. எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்