தமிழகத்துக்கான வரி பங்கில் 4,758 கோடி ரூபாயை விடுவித்தது மத்திய அரசு.!
தமிழகத்திற்கு வழங்க வேண்டிய வரிப்பணத்தில் 4,758 கோடி பங்கு நிதியை தற்போது மத்திய அரசு விடுவித்துள்ளது.
ஜி.எஸ்.டி வரி பங்கீட்டில் , அந்தந்த மாநிலங்களுக்கு, மத்திய அரசு அதன் வரி பங்கு தொகையினை மாதந்தோறும் விடுவிப்பது வழக்கம்.
அந்த வகையில், மாதந்தோறும், 58,332 கோடி ரூபாய் பங்கு தொகையாக மாநிலங்களுக்கு விடுவிக்கப்படும். அந்த வகையில் கடந்த 2 தவணை பங்காக, 1.16 லட்சம் கோடியை மாநிலங்களுக்கு மத்திய அரசு விடுத்துள்ளது.
இதில், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய வரிப்பணத்தில் 4,758 கோடி பங்கு நிதியை தற்போது மத்திய அரசு விடுவித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.