தக்காளி விலை கிடுகிடு உயர்வு… தமிழக அரசு அதிரடி நடவடிக்கை.! ஒரு கிலோ 40, 42.!
தமிழக அரசு சார்பில் பண்ணை பசுமை கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்து வருகிறது.
தக்காளி விளைச்சல் குறைவு காரணமாக, அதன் விலை வெளிச்சந்தைகளில் உயர்ந்துள்ளது. அதனை கட்டுப்படுத்த, தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதன்படி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல் பகுதி விவசாயிகளிடம் இருந்து தக்காளியை கொள்முதல் செய்து, பண்ணை பசுமை கடைகள் மூலம் மக்களுக்கு குறைந்த விலையில் தக்காளியை விற்பனை செய்து வருகிறது. அதன்படி, சென்னை, பண்ணை பசுமை கடைகளில் தக்காளி ஒருகிலோ 40 முதல் 42 வரையில் விற்கப்பட்டு வருகிறது.