வாடகை கேட்டு காலி செய்ய வற்புறுத்தினால் சட்டப்படி நடவடிக்கை : தமிழக அரசு அறிவிப்பு!
நாடு முழுவதும் தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால், தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதனால் வாடகை வீட்டில் இருக்கும் தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.
இதனை கருத்தில் கொன்று தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. அதன்படி, தொழிலாளர்கள், மாணவர்கள் தங்கியிருக்கும் வாடகை வீட்டு உரிமையாளர்கள் ஒரு மாதம் வாடகை வசூலிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், வாடகை கேட்டு வீட்டை காலிசெய்ய கூறினால், வீட்டு உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கபடும் எனவும் அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் தொழிலாளர்களுக்கு இந்த ஊரடங்கு காலத்தை கணக்கிட்டு சம்பளத்தில் பிடித்தம் செய்ய கூடாது. அவர்களுக்கு உரிய சம்பளத்தை கொடுக்க வேண்டும் என தொழில் நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.