தமிழக அரசின் மேல்முறையீடு! ரோஸ்டர் அட்டவணையை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு!

tn govt case

ஆர்எஸ்எஸ் அமைப்பினர் விஜய தசமி மற்றும் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு அக்டோபர் 22 மற்றும் 29 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் 33 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அப்போது, ஆர்எஸ்எஸ் அமைப்பின் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும் என காவல் துறைக்கு உத்தரவிடப்பட்டது.

நீதிமன்றம் உத்தரவிட்டும் ஊர்வலத்துக்கு காவல் துறை அனுமதிக்கவில்லை என்பதால் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர். இந்த அவமதிப்பு வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், ஊர்வலம் நடத்த அனுமதி கோரிய தேதிகள் நிறைவடைந்துவிட்ட நிலையில், அவசர வழக்காக விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று விசாரணைக்கு பட்டியலிட்ட பின்ர் விசாரிக்கப்படும் என நீதிபதி ஜெயசந்திரன் தெரிவித்திருந்தார்.

நீட் விலக்கு : காங்கிரஸ் தலைவர்களிடம் கையெழுத்து வாங்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.!

அதன்படி, நேற்று முன்தினம் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை சென்னை ஐகோர்ட்டில் வந்தது. அப்போது, ஆர்எஸ்எஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழ்நாடு உள்துறை செயலாளர், டிஜிபி நேரில் ஆஜராகி பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளோம், இன்று மனு விசாரணைக்கு வருகிறது எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்ததை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு மீதான விசாரணை நடைபெற்றது.

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து என்னை நீக்கியது செல்லாது – சசிகலா

அப்போது, உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறும்போது உச்ச நீதிமன்றத்தில் ஏன் மேல்முறையீடு என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். ஆர்.எஸ்.எஸ். தரப்பு அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளதால், உச்ச நீதிமன்றம் இதில் தலையிட வேண்டும் என தமிழ்நாடு அரசு தரப்பில் பதில் தெரிவிக்கப்பட்டது. தனி நீதிபதி தீர்ப்பில் தவறு இருந்தால் டிவிசன் அமர்வு சரிசெய்ய வேண்டும் எனவும் நீதிபதி கூறினார்.

மேலும், உயர்நீதிமன்ற வழக்குகளின் ரோஸ்டர் அட்டவணையைத் தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு, ரோஸ்டர் அட்டவணையை பார்த்த பின்னர் தான் வழக்கு விசாரணைக்கு உகந்ததா என முடிவெடுக்கலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர். இதன்பின், தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நவம்பர் 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்