சிறப்பு ரயில்களை இயக்க தமிழக அரசு கோரிக்கை
சமீபத்தில், தமிழகத்தில் ரயில் சேவை நிறுத்திவைக்க கோரி தமிழக முதல்வர் கோரிக்கை வைத்தார்.
கொரோனா வைரஸ் காரணமாக ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து, ஜுன் 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் ரயில் சேவை தொடங்க உள்ளது. முதற்கட்டமாக 200 விரைவு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்நிலையில், ஏ.சி. வசதி இல்லாத 4 சிறப்பு ரயில்களை மட்டும் தமிழகத்தில் இயக்க தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைத்துள்ளது. இந்த கோரிக்கையை தெற்கு ரயில்வே ரயில்வே வாரியத்துக்கு பரிந்துரைத்துள்ளது.
சமீபத்தில், கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், தமிழகத்தில் ரயில் சேவை நிறுத்திவைக்க கோரி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை வைத்தார். அந்த கோரியையை ரயில்வே துறை ஏற்றுக்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.