அரசியல்

தமிழ்நாடு அரசு உடனடியாக இவர்களை அழைத்துப் பேசி சுமூக தீர்வு காண வேண்டும் – ஓபிஎஸ்

Published by
லீனா

கல்குவாரி உரிமையாளர்கள், கல் உடைக்கும் உரிமையாளர்கள் மேற்கொண்டுள்ள வேலை நிறுத்தத்தால் பல துறைகள் முடங்கும் ஆபத்து உள்ளது என ஓபிஎஸ் அறிக்கை. 

கல்குவாரி உரிமையாளர்கள், கல் உடைக்கும் உரிமையாளர்கள் மேற்கொண்டுள்ள வேலை நிறுத்தத்தால் இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயமும், கட்டுமானத்துறை உள்ளிட்ட பல துறைகள் முடங்கும் ஆபத்தும் உள்ளது. தமிழ்நாடு அரசு உடனடியாக இவர்களை அழைத்துப் பேசி சுமூக தீர்வு காண வேண்டும் என ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள  அறிக்கையில்,’தொழில்மயமான மாநிலங்களின் வரிசையில் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ வேண்டுமென்றால், அதற்கு உகந்த சூழ்நிலையை உருவாக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் மாநில அரசுக்கு உண்டு. இந்த சூழ்நிலை உருவாக்கப்பட்டால்தான், அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைப்பதோடு, வேலைவாய்ப்புகள் அதிகரிக்கக்கூடிய சூழ்நிலை உருவாகி நாட்டின் பொருளாதார வளர்ச்சி உயர்வதற்கான உகந்த சூழ்நிலை ஏற்படும். ஆனால், கடந்த இரண்டு ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் இதற்கு முற்றிலும் முரணான சூழ்நிலை நிலவுகிறது.

பிற மாவட்டங்களிலிருந்து சென்னையை நோக்கி ஒரு நாளைக்கு
கிட்டத்தட்ட 2,000 லாரிகளில் கற்கள் வந்து கொண்டிருந்த நிலையில், தற்போது இதில் மிகப் பெரிய தாக்கம் ஏற்பட்டுள்ளதாக லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர். கல் குவாரி உரிமையாளர்கள் மற்றும் கல் உடைக்கும் ஆலைகளின் ‘வேலை நிறுத்தம் தொடர்ந்தால், கட்டடத் தொழில் மிகப் பெரிய பாதிப்பினைச் சந்திக்கும் என்றும், இதன் காரணமாக கட்டுமானச் செலவு மேலும் பன்மடங்கு அதிகரிக்கும் என்றும், இதன் விளைவாக ஏழையெளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்றும் கட்டுமானத் துறையினர் தெரிவிக்கின்றனர்.

இது தவிர, கட்டுமானத் துறையுடன் தொடர்புடைய குழாய் பதிக்கும் பணிகள், மின்சார சாதனம் பொருத்தும் பணிகள் என பல பணிகள் பாதிக்கப்படக்கூடும். இந்த வேலைநிறுத்தம் கட்டுமானத் துறையில் தாக்கத்தை போன்றவற்றை கைத்தொழிலாக மேற்கொள்வதற்கான அதிகாரத்தை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு மீண்டும் வழங்கவும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.’ என தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

ரூ.60,000-ஐ நெருங்கிய ஆபரணத் தங்கத்தின் விலை… இன்றைய நிலவரம் என்ன.?

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வரும் நிலையில், இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480…

1 hour ago

நடிகர் சைஃப் அலிகான் மீது கத்திக்குத்து – 20 குழுக்கள் அமைப்பு!

மும்பை: நடிகர் சைஃப் அலிகான் மீதான தாக்குதல் தொடர்பாக மும்பை போலீசார் 20 குழுக்களை அமைத்து குற்றவாளியை தீவிரமாக தேடி…

3 hours ago

ஆந்திராவில் எல்லையில் லாரி மீது பஸ் மோதி விபத்து… 4 தமிழர்கள் பலி.!

ஆந்திரா: திருச்சியை சேர்ந்த 40 பேர் திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்பொழுது, சித்தூர்…

4 hours ago

LIVE : ஈரோடு இடைத்தேர்தல் மனு தாக்கல் முதல்.. சைஃப் அலிகான் மீதான தாக்குதல் வரை.!

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது. இன்று தான் கடைசிநாளாகும். இந்நிலையில், திமுக வேட்பாளர்…

5 hours ago

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவு.!

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாளாகும். காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு…

5 hours ago

மகளிர் பிரீமியர் லீக் அட்டவணை வெளியீடு! எப்போது தொடக்கம்?

டெல்லி: ஐ.பி.எல். பாணியில் நடத்தப்படும் மகளிர் பிரீமியர் லீக் 2025-ன் மூன்றாவது 20 ஓவர் கொண்ட கிரிக்கெட் போட்டி பிப்ரவரி…

5 hours ago