உலகளாவிய அதிநவீன விளையாட்டு நகரம் அமைக்க தமிழ்நாடு அரசு திட்டம்!

sports city

சென்னை செம்மஞ்சேரியில் உலகளாவிய அதிநவீன விளையாட்டு நகரம் அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. உலகளாவிய விளையாட்டு நகரம் அமைப்பதற்கான ஆலோசகர் நிறுவனத்தை பணியமர்த்த, அதற்கான ஒப்பந்த புள்ளி வெளியாகி உள்ளது. அதன்படி, விளையாட்டு நகரம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்பந்த புள்ளி கோரப்பட்டுள்ளது.

சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம்,  அதிநவீன விளையாட்டு நகரம் அமைப்பதற்கான மின்னணு மூலம் ஒப்பந்த புள்ளி கோரியுள்ளது. அதன்படி, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் சார்பில் செம்மஞ்சேரியில் உலகளாவிய விளையாட்டு நகரம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. திருச்சி, செங்கிப்பட்டி மற்றும் சென்னை ஆகிய இடங்கள் ஆலோசனையில் இருந்த நிலையில், இறுதியாக சென்னையில் OMR-இல் உள்ள செம்மஞ்சேரியில் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

அதிநவீன விளையாட்டு நகரம் அமைக்கப்பட்டால் விளையாட்டுகளின் வளர்ச்சிக்கு ஊக்கம் அளிப்பதுடன், முன்னணி விளையாட்டுப் போட்டிகளின் முனையமாக அமையும் என எதிர்பார்க்கபடுகிறது. அந்தவகையில், விருப்பமுள்ள நிறுவனங்கள் 1நவம்பர் 4ம் தேதிக்குள் WWW.tntnders.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
TVK Vijay Dharmapuri
Pradeep John -TN Rains
Kasthuri Shankar - Police Arrest
Arvind Kejriwal - Kailash Gahlot
Space X - Elon Musk
tn rainy