வழிபாட்டு தலங்களை திறக்கக்கோரிய வழக்கு – தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தில் உள்ள அனைத்து வழிபாடு தலங்கள் திறக்கக்கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு காரணமாக பள்ளிகள்,கல்லூரிகள்,பல்கலைக்கழகங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளது.அத்தியாவசிய கடைகளை தவிர பிற கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை.இந்த சமயத்தில் தான் பள்ளிகள் கல்லூரிகள் ,ஆலயங்கள் என அனைத்தும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.தற்போது 3-வது ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டது.அதிலும் குறிப்பாக மதுக்கடைகளை திறக்க ஒரு சில மாநில அரசுகள் முடிவு செய்தது.அதன்படி திறக்கப்பட்டுள்ளது.ஆனால் தமிழகத்தில் மட்டும் நீதிமன்றத்தின் உத்தரவு காரணமாக கடந்த 7-ஆம் தேதி திறக்கப்பட்ட டாஸ்மாக் கடை மீண்டும் மூடப்பட்டுள்ளது.
இதனிடையே தான் அனைத்து மத வழிபாட்டு தலங்களையும் திறக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஓன்று தொடரப்பட்டது.அதாவது,சென்னையை சேர்ந்த ஜலீல் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.அவரது வழக்கில்,அத்தியாவசியமில்லாத டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.மக்களுக்கு நம்பிக்கை அளிக்கக்கூடிய வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி அளிக்கவில்லை என்று தெரிவித்தார்.சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று வழக்கின் விசாரணை நடைபெற்றது.அப்பொழுது மத்திய மற்றும் மாநில அரசுகள் சார்பில் பதில் அளிக்கப்பட்டது.அதாவது, வழிபாட்டுத் தலங்களை திறப்பது குறித்து மே 15 அல்லது 16 ஆகிய தேதிகளில் முடிவெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.பின்னர் இந்த வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவு பிறப்பித்தது சென்னை உயர்நீதிமன்றம். மேலும் 18 தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிமன்றம்.