இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 114 ஆக அதிகரித்துள்ளது.இதனால் மத்திய ,மாநில அரசு கொரோனோ வைரஸை தடுக்க பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கொரோனா வைரஸை தேசிய பேரிடராக அறிவித்தது மத்திய அரசு.
கொரோனா வைரஸ் காரணமாக தமிழகத்தில் அனைத்து மாவட்டத்தில் உள்ள தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக எல்லையில் உள்ள 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருக்கும் வணிக வளாகங்கள் மற்றும் திரையரங்கம் மூடப்பட்டுள்ளன.
இதையடுத்து அனைத்து பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது இந்நிலையில் டாஸ்மாக் மதுக்கடைகள் , மது கூடங்களுக்கு கை சுத்திகரிப்பான் வைக்கவும் அங்கு வரும் நுகர்வோர் அதை பயன்படுத்துமாறு மதுக்கடை ஒப்பந்ததாரர்கள் அறிவுறுத்த வேண்டும் என தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
மேலும் மதுக்கூடங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கும் முக கவசம் ,கை சுத்திகரிப்பான் ஆகியவை மதுக்கடை ஒப்பந்தக்காரர்கள் வழங்க வேண்டும். அதை அவ்வப்போது ஆய்வு செய்து உறுதி செய்ய அனைத்து மாவட்ட மேலாளர்கள் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…