ஆவணங்களை ஒப்படைக்க பொன்.மாணிக்கவேலுக்கு தமிழக அரசு ஆணை ..!
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சென்னை உயர்நீதிமன்றம் ஓய்வுபெற்ற ஐ.ஜி. பொன்.மாணிக்கவேலை சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை சிறப்பு அதிகாரியாக நியமித்தது. மேலும் சிறப்பு அதிகாரிக்கு தேவையான வசதிகளையும் , அலுவலகம் மற்றும் போலீஸ் அதிகாரிகளை ஒதுக்கி தருமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டு இருந்தது.
இவரின் பதவிக்காலம் இன்று உடன் நிறைவடைகிறது.இந்நிலையில் தனது பதவி காலத்தை நீட்டிக்க கோரி சென்னை உச்சநீதிமன்றத்தில் பொன். மாணிக்கவேல் மனு தாக்கல் செய்தார்.பொன்.மாணிக்கவேலின் பதவி காலத்தை நீட்டிக்க கூடாது என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இந்த மனு நாளை மறுநாள் விசாரணைக்கு வரவுள்ளதால் பொன். மாணிக்கவேலின் பதவி நீட்டிப்பு குறித்து எந்த உத்தரவும் வழங்க முடியாது என பொன்.மாணிக்கவேல் தொடர்பான வழக்குகள் அனைத்தும் டிசம்பர் 6-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சிலை கடத்தல் வழக்கின் சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்ட பொன். மாணிக்கவேல் அவர்களின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது. இதை தொடர்ந்து சிலை கடத்தல் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் ஒப்படைக்குமாறு பொன்.மாணிக்கவேலுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பொன் மாணிக்கவேல் ஏழு ஆண்டுகளில் 1,146 சிலைகளை மீட்டுள்ளார். வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட ஒன்பது சிலைகளை மீட்டு தமிழக்த்திற்கு கொண்டு வந்துள்ளார். சர்வதேச சிலை கடத்தல்காரர் சுபாஷ் சந்திர கபூர் உள்ளிட்டோரை கைது செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.