குழந்தையின் கல்வி செலவை ஏற்க தமிழக அரசுக்கு உத்தரவு!
குடும்ப கட்டுப்பாடு செய்த பின் குழந்தை பிறந்தால், குழந்தையின் கல்வி செலவை ஏற்க தமிழக அரசுக்கு உத்தரவு.
அரசு மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு செய்த பின் குழந்தை பிறந்தால் இழப்பீடு வழங்க கோரி தொடரப்பட்ட வழக்கில், மனுதாரரின் பொருளாதாரம், சமுதாய பின்புலத்தை கருத்தில் கொண்டு ரூ.3 லட்சம் இழப்பீடாக வழங்க உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
குழந்தைக்கு அரசு அல்லது தனியார் பள்ளியில் இலவசமாக கல்வி வழங்க நீதிபதி புகழேந்தி ஆணையிட்டுள்ளது. ஏற்கனவே, கல்வி கட்டணம் செலுத்தியிருந்தால் அதனை திரும்பி வழங்க நீதிபதி தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி , குழந்தை 21 வயது அடையும் வரை அரசு தரப்பில் மாதம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.