இந்த பணியாளர்களின் பணியினை வரன்முறை செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவு..!
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் ஜூலை 2022 நிலையில் 5 வருடங்களுக்கு மேலாக தற்காலிகமாக பணிபுரியும் தினக்கூலி தொகுப்பூதிய பணியாளர்களின் பணியினை வரன்முறை செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களில் 31.07.2021 அன்று தொடர்ந்து ஐந்து வருடங்களுக்கு மேலாக தற்காலிகமாகப் பணிபுரியும் தினக்கூலி/ தொகுப்பூதிய பணியாளர்களின் பணியினை வரன்முறை செய்திட ஆணையருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதன் அடிப்படையில் தகுதியான தற்காலிக பணியாளர்கள் பணிவரன்முறை செய்யப்பட்டு வருகின்றனர்.
சார்நிலை அலுவலர்களிடமிருந்து வரப்பெற்ற அறிக்கைகளின் அடிப்படையில் 31.07.2022 அன்றைய நிலையில் 5 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து பணிவரன்முறை செய்திட தகுதியான பணியாளர்களின் எண்ணிக்கை 328 என இறுதி செய்யப்பட்டுள்ளது.
எனவே பட்டியலை சரிபார்த்து தற்காலிக பணியாளர் விவரங்களை நீக்கம் செய்ய வேண்டி இருப்பின் அவற்றினை நீக்கம் செய்தும், தகுதியான பணியாளர்களின் விவரங்கள் விடுப்பட்டிருந்தால் அவற்றினை சேர்த்தும் முழுமையான பட்டியலினை முதுநிலை மற்றும் முதுநிலை அல்லாத அனைத்து திருக்கோயில்களுக்கும் சேர்த்து 15.11.2023 தேதிக்குள் விவரங்களை தொகுத்து ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்திட மண்டல இணை ஆணையர்களை கேட்டுக்கொள்ளப்படுகிறது.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.