குட்கா தடை நீக்கத்திற்கு எதிராக தமிழ்நாடு அரசு மேல்முறையீடு!

Default Image

குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கான தடை நீக்கத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு.

தமிழ்நாடு அரசு மேல்முறையீடு:

tngovt,sc

குட்கா தடை நீக்கத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்துள்ளது. தமிழகத்தில் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கான தடையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

புகையிலைப் பொருட்கள் – தடை ரத்து:

kutkahc

குட்கா, பான்மசாலா மற்றும் புகையிலையை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்திருந்தது. இதனை எதிர்த்து குட்கா தயாரிப்பு நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கில் தடையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

hanse

உணவு பாதுகாப்பு ஆணையர் அதிகாரத்தை மீறியதாக கூறி குட்காவிற்கு விதித்த தடையை ரத்து செய்தது உயர்நீதிமன்றம். இந்த உத்தரவிற்கு சமூக வலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இளைஞர்கள் புகையிலை பொருட்களுக்கு அடிமையாகும் நிலை ஏற்படலாம் என கவலை தெரிவித்தனர்.

தமிழகத்தில் குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கான தடை உத்தரவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என அரசியல் தலைவர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இந்த நிலையில், குட்கா தடை நீக்கத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்