அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 பொங்கல் பரிசு… தமிழ்நாடு அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூபாய் ஆயிரம் ரொக்கத்துடன் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழு கரும்புடன் சேர்த்து ரூ.1000 ரொக்க பணம் உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்பு நியாயவிலை கடைகள் மூலம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1,000 வழங்கப்படுவதற்கான டோக்கன் விநியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில், ஜனவரி 10 முதல் 13ம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பினை ரேஷன் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா இல்லா அட்டைதாரர்கள், தவிர அனைவருக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தினர். இந்த நிலையில், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூபாய் ஆயிரம் ரொக்க பணத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அரசு ஊழியர்கள், வருமானவரி செலுத்துவோர், சக்கரை மற்றும் பொருளில்லா அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 ரொக்கம் இல்லை என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று நிபந்தனையின்றி தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 ரொக்க பணத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.