அரசுப் பேருந்துகளில் ஜி.பி.எஸ். கருவி ….டெண்டர் இறுதி முடிவெடுக்கக்கூடாது…!!
அரசுப் பேருந்துகளில் ஜி.பி.எஸ். கருவி டெண்டருக்கு தடை கோரிய வழக்கில் டெண்டர் தொடர்பாக இறுதி முடிவெடுக்கக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக திருச்சி லால்குடியைச் சேர்ந்த ஜெ.சுதாகர் என்பவர் தாக்கல் செய்த இந்த மனுவில், அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு சொந்தமான 22 ஆயிரம் பேருந்துகளில் 20 கோடி ரூபாய் மதிப்பிலான ஜிபிஎஸ் கருவி பொருத்த முடிவு செய்யப்பட்டு மற்றும் இந்த அறிவிப்பை சாலை போக்குவரத்து நிறுவன இயக்குநர் வெளியிட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்த டெண்டர் அறிவிப்பில் வெளிப்படையான டெண்டர் சட்டமும் மற்றும் விதிகளும் முறையாக பின்பற்றப்படவில்லை என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜிபிஎஸ் திட்டத்துக்கான மென்பொருள் குறித்த விவரங்களைச் சேகரிக்க கால அவகாசம் தேவைப்படும் இந்தநிலையில் 18 நாளில் விண்ணப்பிக்குமாறு கூறப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குழப்பத்தை ஏற்படுத்துகிறது.
எனவே, டெண்டர் அறிவிப்பை ரத்து செய்துவிட்டு, புதிய டெண்டர் வெளியிட ஆணையிடுமாறு மனுதாரர் உயர்நீதிமன்ற மதுரை கிளையை அணுகியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர், டெண்டர் தொடர்பாக இறுதி முடிவெடுக்கக் கூடாது என உத்தரவிட்டார். இதுகுறித்து போக்குவரத்து செயலர், ஆணையர் மற்றும் சாலை போக்குவரத்து நிறுவன இயக்குநர் பதிலளிக்கவும் ஆணையிட்டார்.
இதனால் ஜிபிஎஸ் கருவி டெண்டருக்கு இடைக்கால தடைவித்துள்ளது உயர்நீதிமன்ற மதுரைகிளை என்பது குறிப்பிடத்தக்கது
DINASUVADU