நிர்வாக திறனில் தமிழகம் முதலிடம்! – மத்திய அரசின் ஆய்வறிக்கையில் புதிய தகவல்!
- பல துறைகளில் மாநில அரசுகளின் நிர்வாக திறனை மத்திய அரசின் நிர்வாக சீர்திருத்த துறை ஆய்வெடுத்து அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
- இதில் நிர்வாக திறனில் தமிழகம் முதலிடத்தை பெற்றுள்ளது.
டிசம்பர் 26ஆம் தேதியான இன்று நல்லாட்சி தினமாக கடைபிடிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிர்வாக சீர்திருத்த துறையானது மாநில அரசின் துறை வாரியான செயல்பாட்டை கணக்கெடுத்தது. அதில் அனைத்து துறைகளின் செயல்பாடும் கணக்கெடுக்கப்பட்டது.
அதில் அனைத்து துறைகளின் செயல்பாட்டின் அடிப்படையில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. மஹாராஷ்டிரா இரண்டாம் இடமும், கர்நாடகா மூன்றாமிடமும், ஆந்திர மாநிலம் 5வது இடமும், 8 வது இடத்தில் கேரளாவும் பிடித்துள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பில் தமிழகம் முதலிடம், மாநில நிர்வாக கட்டமைப்பில் முதலிடம், பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை அமைத்து தரும் மாநிலங்களில் தமிழகம் முதலிடம், வேளாண் துறையில் தமிழகம் 9வது இடம் பிடித்துள்ளது. பொது சுகாதாரத்தில் 2ஆம் இடம் பிடித்துள்ளது. வணிகத்துறையில் 14வது இடம் பிடித்துள்ளது. மனிதவள மேம்பாட்டில் தமிழகம் 5ஆம் இடத்தில உள்ளது.