தமிழ்நாட்டு மீனவர்கள் படகுக்கு ரூ.2 கோடி அபராதம்! – மாலத்தீவு அரசு

Published by
பாலா கலியமூர்த்தி

மாலத்தீவு கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்களின் படகுக்கு ரூ.20 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளம் மீன் இறங்குதளத்திலிருந்து, 1-10-2023 அன்று, IND-TN-12-MM-6376 பதிவு எண் கொண்ட விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற 12 மீனவர்கள், கடந்த 23ம் தேதி தினாது தீவு அருகே மாலத்தீவு கடலோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்டனர்.

12 பேரையும் மீட்க மத்திய – மாநில அரசுகள் மீட்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவா்களின் உறவினா்களும், விசைப்படகு உரிமையாளா் சங்கத்தினரும் கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து,  உரிய தூதரக நடவடிக்கைகள் மூலம், மாலத்தீவு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, கைது செய்யப்பட்டுள்ள 12 மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவித்திட வேண்டுமென்று மத்திய அமைச்சருக்கு கடிதம் முதலமைச்சர் முக ஸ்டாலின் வலியுறுத்தி இருந்தார்.

தமிழக உள்துறை செயலாளர், டிஜிபி நேரில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு!

இதனைத்தொடர்ந்து, மாலத்தீவு கடற்படையால் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர்கள் 12 பேரும் சமீபத்தில் விடுவிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி தருவைகுளம் பகுதியைச் சோ்ந்த மைக்கேல்ராஜ், மகேஷ்குமாா் பரமசிவம், ஆதிநாராயணன், திரவியம், அந்தோணி செல்வசேகரன், பிரான்சிஸ், அந்தோணி, சிலுவைப்பட்டி அன்புசூசை மிக்கேல், ராமநாதபுரம் மணி, ராமேஸ்வரம் உதயகுமாா், விக்னேஷ், மதுரை மாதேஷ்குமாா் துரைப்பாண்டி ஆகிய 12 பேரும் கடந்த 30ம் தேதி விடுவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் சிறைபிடிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்களின் படகுக்கு ரூ.20 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் 12 பேரை மாலத்தீவு நீதிமன்றம் அண்மையில் விடுவித்த நிலையில், அவர்களின் படகுக்கு ரூ.2 கோடி அபராதம் விதிக்கப்பட்டதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.  ரூ.2 கோடி அபராதம் செலுத்தினால் மட்டுமே படகை விடுவிக்க முடியும் என மாலத்தீவு அரசு நிபந்தனை விதித்துள்ளது. மாலத்தீவு அரசின் நிபந்தனையால் ஊர் திரும்ப முடியாமல் தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் மீனவர்கள் 12 பேர் தவித்து வருகின்றனர்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

தவெக செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட திமுக அரசு குறித்த தீர்மானங்கள் என்னென்ன?

சென்னை : தவெக தலைவர் விஜய் தலைமையில் இன்று பனையூரில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில்,…

46 mins ago

“மதுக்கடைகளை மூட வேண்டும்” தவெக செயற்குழு கூட்டத்தில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றம்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில், பொதுச் செயலாளர் ஆனந்த் முன்னிலையில், தவெக செயற்குழு மற்றும்…

3 hours ago

இந்த 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை : தென் கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…

3 hours ago

IND vs NZ : தொடரும் தோல்வி! இந்தியாவை வொயிட்-வாஷ் செய்த நியூசிலாந்து அணி!

மும்பை : இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த மூன்று போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரை நியூசிலாந்து…

3 hours ago

சூர்யா ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்.. “கங்குவா” சிறப்பு காட்சி உண்டு.! எங்கு தெரியுமா?

சென்னை : இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள 'கங்குவா' படம் சூர்யாவின் 42வது படமாகும். இப்படத்தில் சூர்யாவைத் தவிர,…

5 hours ago

“தமிழக மக்களை திமுக அரசு ஏமாற்றுகிறது” த.வெ.க. தலைவர் விஜய்!

சென்னை : பனையூரில் நடைபெறும் தவெக செயற்குழு கூட்டம் முதல் நியூசிலாந்து VS இந்தியா மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி…

6 hours ago