தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40ஆக உயர்வு !
தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தரப்பில் மேற்கொண்டு வருகிறது. இதில் மே 17ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தமிழகத்தில், இன்று மட்டும் 600 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6009ஆக உயர்ந்துள்ளது. இதுவரை தமிழகத்தில் 1605 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதையடுத்து சென்னையில் 2 பேர் மற்றும் நெல்லையில் ஒருவர் என மொத்தம் 3 பேர் இன்று கொரோனாவில் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் உயிரிழப்பு விகிதம் 0.68 சதவீதமாக உள்ளது என அறிவித்துள்ளனர்.