தமிழக கல்லூரி மாணவர்களின் கல்விக்கடனை தள்ளுபடி செய்க – ஓபிஎஸ் வலியுறுத்தல்!

Default Image

30 வயதிற்குட்பட்ட தமிழகம் கல்லூரி மாணவர்களின் கல்வி கடனை தள்ளுபடி செய்வதாக வாக்குறுதி அளித்து ஆட்சியில் அமர்ந்துள்ள திமுக அரசு, வாக்குறுதியை நிறைவேற்றதுடன், கல்லூரி தேர்வு கட்டணங்களை இரண்டு ,மூன்று மடங்கு உயர்த்தி உள்ளதற்கு கண்டனம் தெரிவித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 147 இணைப்புக் கல்லூரிகளில் கட்டணங்கள் இரண்டு, மூன்று மடங்கு உயர்ந்துள்ளதாகவும். இதனால் மாணவர்கள் போராட்டம் நடத்துவதாகவும் செய்திகள் வெளியாகிறது ஆனால் அரசு இதற்கு எவ்வித நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை. எனவே பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து பழைய கட்டணம் வசூலிக்கவும் மற்ற பல்கலைக்கழகங்களும் கட்டண உயர்வை அறிவிக்காமல் இருக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் நிலவுகிறது.

எனவே மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மாணவர்களின் ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு, பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வுக் கட்டணம் உட்பட அனைத்து கட்டண உயர்வையும் ரத்து செய்ய வேண்டும் எனவும், வருங்காலங்களில் பல்கலைக்கழகங்களில் கட்டண உயர்வு அறிவிப்பு இருக்கக் கூடாது எனவும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்துவதாக தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்