தமிழகத்தில் தொடரும் கல்லூரி மாணவர்கள் போராட்டம்! கோவை, சென்னை, திருச்சி…

Default Image
  • குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடிய டெல்லி மாணவர்கள் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையினை தொடர்ந்து மாணவர்கள் மீது போலீஸ் தாக்குதல் நடத்தப்பட்டது.
  • இதனை கண்டித்து தமிழக கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  

மத்திய அரசானது அண்மையில் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தியது. அந்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. அதிலும், வடகிழக்கு மாநிலங்கள், டெல்லி என பல்வேறு இடங்களில் போராட்டம் தீவிரமாகி வருகிறது.

இந்த போராட்டத்தில் ஈடுபட்ட டெல்லி கல்லூரி மாணவர்கள் மீது போலீசார் தடியடி தாக்குதல் நடத்தினர். மாணவர்கள் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. மாணவர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதலுக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதில் தமிழகத்தில் மாணவர்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றனர். இந்த போராட்டம் தற்போது தீவிரமடைந்து வருகிறது. கோவையில் பாரதிதாசன் பல்கலைக்கழத்தில் இன்று பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் தமிழக ஆளுநர் பண்வாரிலால் புரோஹித் கலந்து கொள்ள உள்ளார். இதற்காக அப்பகுதியில் 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் மாணவர்கள் ஆளுநர் வருகைக்கு முன்னர் போராட்டம் நடத்தி வந்தனர். போராட்டம் நடத்திய மாணவர்களை அங்கிருந்த போலீசார் அப்புறப்படுத்தியதால் அங்கு பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது.

அதேபோல சென்னை புதுக்கல்லூரியிலும் மாணவர்கள், கல்லூரி வளாகத்திற்குள் போராட்டம் நடத்தி வருகின்றனர். திருச்சி தூய வளனார் கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்