வெளிமாநில தொழிலாளர்கள் தங்கியுள்ள முகாம்களில் முதலமைச்சர் திடீர் ஆய்வு.!

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், வெளிமாநிலங்களில் இருந்து வேலைக்கு தமிழகம் வந்தவர்கள் தமிழகத்திலிருந்து வெளியேற முடியாமல் தவித்தனர்.
இந்நிலையில் தமிழகத்தில் இருக்கும் வெளிமாநில தொழிலாளர்கள் அந்தந்த மாவட்டந்தோறும் உள்ள முகாம்களில் தங்கவைத்து தனிமைப்படுத்துமாறு முதல்வர் மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்தினார்.
வெளிமாநில தொழிலாளர்கள் தங்கியிருக்கும் இடம், அவர்களுக்கான மருத்துவ, சுகாதார வசதி என அனைத்தையும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சென்னையில் ஆய்வு செய்தார். சென்னை ஆர்.ஏ புரத்தில் உள்ள முகாமில் ஆய்வு செய்து அங்கு தங்கவைக்கப்பட்டுள்ள தொழிலாளர்களுக்கு வேட்டி, சட்டை, பற்பசை, பிரஷ் ஆகியவற்றை தமிழக முதல்வர் வழங்கினார். அடுத்ததாக வேளச்சேரி, பீளமேடு ஆகிய பகுதிகளுக்கு ஆய்வு மேற்கொள்ள உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
விஜய் தம்பி ஜி இப்படி பேசாதீங்க! தமிழிசை சௌந்தரராஜன் பதிலடி!
March 31, 2025