சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை மகன் உயிரிழந்த விவகாரம்.! சிபிஐ விசாரணை.! முதல்வர் அறிவிப்பு.!

சாத்தான்குளத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட தந்தை-மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக வழக்கு விசாரணையானது நீதிமன்றத்தின் அனுமதி பெற்ற பிறகு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படும். – தமிழக முதல்வர் அறிவிப்பு
சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை மகன்களான ஜெயராஜ் பென்னிக்ஸ் ஆகியோர் சிறையில் உயிரிழந்த விவகாரம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல தரப்பிலிருந்து கண்டனங்கள் வலுத்து வருகின்றன.
இந்த சம்பவம் குறித்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து இன்று சேலத்தில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், சாத்தான்குளத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட தந்தை-மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக வழக்கு விசாரணையானது நீதிமன்றத்தின் அனுமதி பெற்ற பிறகு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படும்.’ என தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : மும்மொழி விவகாரம் முதல்…மகா சிவராத்திரி கொண்டாட்டங்கள் வரை!
February 27, 2025
இந்தியால் அழிந்த இந்திய மொழிகள்., தமிழ் விழித்தது, பிழைத்தது! – மு.க.ஸ்டாலின் பதிவு!
February 27, 2025
விரைவில் அமலாகும் வக்பு வாரிய திருத்த மசோதா? மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
February 27, 2025