தஞ்சையில் சீர்மிகு கட்டடங்கள்.. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.!
தஞ்சையில் சீர்மிகு கட்டடங்கள் திறப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.
இரண்டு நாள் பயணமாக திருச்சி மற்றும் தஞ்சை சென்றுள்ள தமிழக முதல்வர் நேற்று, திருச்சியில் திமுக தொண்டர்களுடன் நாடாளுமன்ற தேர்தல் வியூகங்கள் குறித்த பயிற்சி பட்டறையில் கலந்துகொண்டு பேசினார். இன்று காலை திருச்சியில் வேளாண் அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார்.
இதனை தொடர்ந்து தற்போது தஞ்சை வந்துள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். அங்கு, தஞ்சை சீர்மிகு நகரம் திட்டத்தின் கீழ் புதியதாக கட்டப்பட்டுள்ள பல்வேறு கட்டடங்களை திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்குகிறார்.
இந்த சீர்மிகு நகரம் திட்டத்தின் கீழ், ஆம்னி பேருத்து நிலையம், சூரிய ஒளி மின் நிலையம், பூங்கா, அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுடன் வருவோர் தாங்குவதற்கு ஏதுவான இடவசதி உள்ளிட்ட கட்டடங்களை தற்போது திறந்து வைத்துள்ளார்.
மேலும், இந்த விழாவில் மாநகராட்சி ஆணையர் குடியிருப்புக்கு அடிக்கல் நாட்டுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இந்த விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.